நாடோடிக் கூட்டம் என்றால் நம் நினைவிற்கு வருவது என்ன?ஒரு இடத்தில் நிலையாகத் தங்க மாட்டார்கள், விவசாயம் செய்து உணவு உற்பத்தி செய்யத்தெரியாதவர்கள், விலங்குகளை வேட்டையாடி உண்பவர்கள்,வித்தைகள் செய்து காட்டி பிழைப்பு நடத்துபவர்கள், பெரும் கணவான்கள் அதட்டினாலெ அடங்கிப்போய்விடுபவர்கள். நமக்குத் தெரிந்த நாடோடிக் கும்பல்களின் அடையாளம் இவைதான்.தற்போதைய சூழலில் நாடோடிக் கூட்டத்தின் வாழ்கை முறை இதுப்போலத்தான் இறுக்கிறது.
இதுவே 1500 வருடங்களுக்கு முன் மத்திய ஆசியாவில் வாழ்ந்த நாடோடிக் கூட்டங்களின் வாழ்க்கை முறை எப்படி இருந்தது தெரியுமா?தற்சமயம் நாம் அவ்வப்போது காணும் சாதுவான கூட்டங்களாக அவர்கள் வாழவில்லை.அவர்கள் பார்ப்பதற்கே பயங்கரமானவர்களாகவும், முரட்டு குணம் வாய்ந்தவர்களாகவும் இருந்தனர்.அவர்களுக்கென்று தனி ராஜ்யமோ, அரசாங்கமோ கிடையாது. ஒரு தலைவர் மட்டும்தான்.கைகளில் எப்போதும் ஆயுதங்களைத் தயார் நிலையில் வைத்திருந்தார்கள்.அவை விலங்குகளை வேட்டையாடுவதற்கு மட்டும் பயன்படுத்தப்படுவதில்லை, மனிதர்களைப் போட்டுத்தள்ளவும் பயன்படுத்தப்பட்டது.வெறும் 100,200 என்று சிறு கூட்டங்களாக அவர்கள் வாழவில்லை.ஒவ்வொறு கூட்டமும் எண்ணிக்கையில் லட்சங்களைத் தொடும்.
20ஆம் நூற்றாண்டில் வாழும் நாடோடிகளுக்கும் ,5ம் நூற்றாண்டில் வாழும் நாடோடிகளுக்கும் உள்ள ஒரே ஒற்றுமை ,என்னவென்றால் இருவருமே விவசாயம் செய்து ஒரு இடத்தில் நிரந்தரமாகத் தங்கமாட்டார்கள்.தாங்கள் வள்ர்க்கும் குதிரை மற்றும் பிற கால்னடைக்ளோடு ஓடிக்கொண்டே இருப்பார்கள்.அப்படி என்றால்
“புவாவிற்கு” வழி ? மனித இனம் தனக்குத் தேவையான் உணவைப் பெற 2 வழிகளைக் கையாளும்.ஒன்று தனது உழைப்பால் உணவை உற்பத்தி செய்துக் கொள்வது, மற்றொன்று உழைப்பால் உணவை உற்பத்தி செய்பவனைக் கொன்றுவிட்டு, அவனுடைய உணவை கைப்பற்றிக் கொள்வது.
5ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நாடோடிகள் இரண்டாவது யுத்தியையே பின்பற்றி வந்தார்கள். நல்ல கொழுத்த ராஜ்யமாகப் பார்த்து, திடீரென்று படையெடுப்பார்கள். அவர்களுடைய எண்ணிக்கை லட்சங்களில் இருப்பதால் சட்டென்று யாராலும் சுதாகரித்து , எதிர்த்தாக்குதல் நடத்த முடியாது.பதிலுக்கு தாக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கூட, அவர்கள் போர்கள்த்தில் அரங்கேற்றும் கொடூரங்களையும், காட்டுமிராண்டித்தனத்தையும், நேரில் பார்கும்போது, எதிர் தக்குதல்ல் நடத்தும் எண்ணத்தை மனதிற்குள் ஆழமாகக் குழித் தோண்டி புதைத்துவிட்டு, “ஜூட்” விட்டு விடுவார்கள்.
இந்த நாடோடிகள் போர்களத்தில் முதலில் பிடிப்பது பெண்கள் மற்றும் குழந்தைகளையே.பெண்கள் தாங்கள் நடத்திய தாகுதலில் பெற்ற வெற்றிக் கோப்பைகள். கைப்பற்றப் பட்ட பெண்கள் கதி என்னவாகும் என்பது உங்களுக்கேத் தெரியும். குழந்தைகள்? அவர்களை அடிமைகளாக விற்று நல்ல லாபம் பார்த்து விடுவார்கள். தாக்குதலுக்கு உள்ளான ஊர் சூரையாடப்படும். வயல்கள், தோட்டங்கள் நாஸ்தியாகிவிடும். தங்களுக்குத் தேவையான அளவிற்கு பெண்கள், குழ்ந்தைகள், கிடைத்தப்பின் ஊரே தீயிட்டுக் கொளுத்தப்படும். அதோடு சரி! அந்த நகரின் பல வருட பாரம்பரியம், வரலாறு, நாகரீகம் குளோஸ்!
ஒரு நாகரீகம் இருந்ததற்கான தடமே அங்கு இருக்காது.அதன் பிறகு,அந்தக் கூட்டங்களுக்கு ஒரே கொண்டாட்டம்தான்.கொள்ளையடித்த செல்வங்களை வைத்து ஜாலியாக சில மாதங்களைக் கழிப்பார்கள்.பின்பு எல்லாம் தீர்ந்தப் பின், வேறு ஒரு புஷ்டியான நாட்டை ஒரு நல்ல நாள்! பார்த்து தாக்கி தங்கள் கைவரிசையை மீண்டும் காட்டுவார்கள்.இதுதான் பழங்கால் நாடோடிகளின் வாழ்க்கை முறையாக இருந்தது வந்தது.இப்படிப்பட்ட டெரரான பயோடெட்டாவைத் தங்கள் அடையாளமாகக் கொண்டு , பிற நாட்டு மக்கள் மத்தியில் பீதியைக் கிளப்பி வந்த ஒரு நாடோடிக் கும்பல் தான் ஹூனர்கள். தாக்குதல் நடத்துவதில் எல்லா கூட்டங்களும் பயங்கரமான யுக்திகளையே கையாளும் என்றாலும் ஹூனர்கள் அதில் கைத்தேர்ந்தவர்கள்.
பார்ப்பதற்குக் குள்ளமாகத் தெரிந்தாலும் போர்க்களத்தில் அனாசயமாக சண்டையிடுவார்கள். குதிரையில் சவாரி செய்தப்படியே , வில்லில் அம்பு பூட்டி குறித் தவறாமல் எதிரியை அடிக்கும் திறமை பெற்றவர்கள். தங்கள் குழந்தைகள் போரில் எற்ப்படும் காயங்களையும், வடுக்களையும் தாங்கிக்கொள்ளப் பழக வேண்டும் என்பதற்காக குழந்தை பிறந்தவுடனேயே அதன் பிஞ்சுக் கண்ணத்தில் கூரான கத்தியால் ஒரு கோடு போட்டுவிடுவார்கள்.இதுதான் அக்குழந்தைக்கு முதல் டிரெயினிங். பிறகு அக்குழந்தை வளரும் போது பல்வேறு போர்ப் பயிற்ச்சிகளை அளித்து உணர்ச்சி இல்லாத ஒரு சண்டைப்போடும் இயந்திரமாக மாற்றி விடுவார்கள்.அவர்களுக்குத் தெரிந்தது இரண்டே விஷயங்கள்.
இந்த ஹூனர்க்களின் ஒரு பிரிவினர் “அடிலா” என்ற தலைவன் தலைமையில் மத்திய ஆசியாவைலிருந்து, ஐரோப்பாவிற்குப் படையெடுத்துச் சென்றனர்.ஒரு நாளைக்கு சிறிது நேரம் மட்டுமே ஓய்வெடுத்து, மற்ற நேரத்தை பயணங்களிலேயே கழித்ததால், அவர்களால் விரைவாக ஐரோப்பியக் காற்றை சுவாசிக்க முடிந்தது.கிழக்கு ஐரோப்பாவை அடந்ததும் அங்குள்ள சிறு,சிறு ராஜ்யங்களையெல்லாம் பந்தாடிவிட்டனர்.ஹூனர்களை எதிர்த்துப்போரிட்ட ஆண்கள் கொல்லப்பட்டனர். போர்களத்திலிருந்து தப்பியோடிய ஆண்கள், துரத்திச்செல்லப்பட்டு கொல்லப்பட்டனர். வழக்கம் போல பெண்கள், கைதானார்கள். வயதான கிழக்கட்டைகளுக்கு பூலோக வாழ்வில் இருந்து விடுதலை அளிக்கப்பட்டது. அப்புறம் அந்த ஊரின் செல்வம், தானியங்கள் மட்டும், மிஞ்சுமா? அதுவும் கொள்ளையடிக்கப்பட்டு ,பின்னர் ஊர் தீக்கிரையாக்கப்பட்டது.
அதன் பிறகு பலியானது மத்திய ஐரோப்பா!அங்கும் எல்லோருக்கும் இதே கதிதான். எந்த சக்தியாலும் ஹூனர்களைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.கிட்டத்தட்ட முழு ஐரோப்பாவும் காலி.கால்வாசி பகுதி லேசான உயிர்ப்புடன் முனகிக்கொண்டிருந்தது.

![]() |
| குதிரையில் இருந்தப்படியே அம்பு எய்யும் ஹூன வீரன் |
- எப்படி போரிடுவது
- போரிட்டு எப்படி கொள்ளை அடிப்பது.
இந்த ஹூனர்க்களின் ஒரு பிரிவினர் “அடிலா” என்ற தலைவன் தலைமையில் மத்திய ஆசியாவைலிருந்து, ஐரோப்பாவிற்குப் படையெடுத்துச் சென்றனர்.ஒரு நாளைக்கு சிறிது நேரம் மட்டுமே ஓய்வெடுத்து, மற்ற நேரத்தை பயணங்களிலேயே கழித்ததால், அவர்களால் விரைவாக ஐரோப்பியக் காற்றை சுவாசிக்க முடிந்தது.கிழக்கு ஐரோப்பாவை அடந்ததும் அங்குள்ள சிறு,சிறு ராஜ்யங்களையெல்லாம் பந்தாடிவிட்டனர்.ஹூனர்களை எதிர்த்துப்போரிட்ட ஆண்கள் கொல்லப்பட்டனர். போர்களத்திலிருந்து தப்பியோடிய ஆண்கள், துரத்திச்செல்லப்பட்டு கொல்லப்பட்டனர். வழக்கம் போல பெண்கள், கைதானார்கள். வயதான கிழக்கட்டைகளுக்கு பூலோக வாழ்வில் இருந்து விடுதலை அளிக்கப்பட்டது. அப்புறம் அந்த ஊரின் செல்வம், தானியங்கள் மட்டும், மிஞ்சுமா? அதுவும் கொள்ளையடிக்கப்பட்டு ,பின்னர் ஊர் தீக்கிரையாக்கப்பட்டது.
![]() |
| அடிலன் |
இதே நேரத்தில் ஹூனர்களின் இன்னொறு பிரிவின் தலைவன் ”தோரமனா” ஒரு நல்ல வளமான சாம்ராஜ்யத்தின் மீது தன் ஆசைக் கண்களை வீசியிருந்தான். இந்த ஒரு நாட்டைப் பிடித்துவிட்டால் போதும், ஜென்மத்திற்கு வேறு யார் மீதும் படையெடுக்கத் தேவையில்லை என்று நினைக்கும் அளவிற்கு அங்கு செல்வம் குவிந்து கிடந்தது. அந்த நாட்டின் மீது தாக்குதல் நடத்துவதற்காக லட்சக்கனக்கான ஹூன வீரர்கள் அடங்கிய பிரம்மாண்டமான் படையுடன் முன்னேறினான். அவன் படையெடுத்துச்சென்றுக் கொண்டிறுந்த நாடு நமது பாரதம்!!!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக